செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, தற்போது மின்னணு சாதனங்களின் சந்தையில் எதிர்பாராத விலை உயர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கூகுள், மெட்டா மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள் தங்களது ஏஐ மாடல்களைப் பயிற்சி விக்கவும், பெரிய டேட்டா சென்டர்களை இயக்கவும் ‘அதிவேக மெமரி’ (HBM RAM) சிப்களைப் பெருமளவில் வாங்குகின்றன.
இந்த சிப்களுக்கு ஏஐ நிறுவனங்கள் அதிக விலை கொடுக்கத் தயாராக இருப்பதால், சாம்சங் மற்றும் மைக்ரான் போன்ற உற்பத்தியாளர்கள் லாபத்தைக் கருதி சாதாரண செல்போன் மற்றும் லேப்டாப்களுக்குத் தேவையான சிப்களின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்துவிட்டனர்.
இந்த உற்பத்தி மாற்றத்தினால் சந்தையில் சாதாரண ரேம் சிப்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மைக்ரான் போன்ற நிறுவனங்கள் தங்களது சில பிரிவுகளை மூடிவிட்டு, இனி ஏஐ நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
சாம்சங் நிறுவனத்திற்குள்ளேயே அதன் மொபைல் பிரிவுக்குத் தேவையான சிப்களை வழங்க அதன் செமிகண்டக்டர் பிரிவு மறுக்கும் அளவிற்கு நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதன் நேரடி விளைவாக, 2026 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் இதர எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை பல மடங்கு உயரக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…