நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தனது அடுத்த பொதுக்கூட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் “மாநாடு என்றால் என்ன? அதை எப்படி நடத்த வேண்டும்? ஒரு தலைவரின் உரை எப்படி இருக்க வேண்டும்?”என்பதை பிப்ரவரி 7 நடக்கும் மாநாட்டில், நான் காட்டுகிறேன், வாருங்கள்! என சவால் விடுத்துள்ளார்.
சமீப காலமாக பல புதிய கட்சி தலைவர்கள் தங்களின் மாநாட்டை நடத்து வரும் நிலையில், ஒரு உண்மையான மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நேரடியாக நிரூபிக்க போவதாக சீமான் தெரிவித்துள்ளார். சீமான் தனது உரைகளில், தமிழர் உரிமைகள், சமூக நீதி, விவசாயிகள் நலன், தமிழகத்தின் முன்னேற்றம் போன்ற விஷயங்களை முன்னிறுத்தி பேசுபவர். எனவே பிப்ரவரி 7 மாநாட்டில், அவர் வழங்கவிருக்கும் உரையாடல் ஒரு game changer speech ஆக இருக்கும், என NTK ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
அவர் பொதுக் கூட்டத்தில் எப்போதும், மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கும். இந்த முறை சீமான் தனது உரையில், புதிய அரசியல் தலைமைகளுக்கு நேரடியாக மாநாடு நடத்தும் பாடம் கொடுக்கப் போகிறார் என்பதால், இது அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. மேலும் சில புதிய கட்சிகள், அரசியல் அனுபவம் இல்லாத சிலரை வைத்துக்கொண்டு மாநாடு நடத்துகிறோம் என்ற பெயரில் கேளிக்கையான செயல்களை செய்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இது மறைமுகமாக TVK தலைவர் விஜயை சுட்டிக்காட்டி உள்ளாரா? சீமான் என்ற கேள்வியை TVK தொண்டர்கள் கேட்கின்றனர்.
