கழிவறைக்குச் சென்ற 9 ஆம் வகுப்பு மாணவி… திடீரென கேட்ட குழந்தை சத்தம்… ஒட்டுமொத்த பள்ளியையும் அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்…!

By Divyamayakannan on ஆவணி 29, 2025

Spread the love

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் அரசுப்பள்ளி ஒன்றில் 17 வயது சிறுமி கடந்த 27ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பள்ளி கழிவறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சுமார் 9 மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை ஆனதாகவும். அதனால் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்ததாகவும் மாணவி போலீசாரிடம் கூறியுள்ளார். அச்சிறுமி மன அழுத்தத்தில்  உள்ளார் என்றும் , மர்ம நபர் யார் என்று இதுவரை கூறவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை 28 வயதுமிக்க அந்த மர்மநபர் யார் என்று தெரிய வரவில்லை. தாயும் சேயும் நலம்.

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மர்ம நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். சிறுமி குணமடைந்த பிறகு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு விசாரிணை மேற்கொள்ள உள்ளோம் என்ற போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி முதல்வர் , செவிலியர், விடுதி வார்டன் மற்றும் மாணவியின் சகோதரர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பள்ளியிலும் அப்பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.