ரஜினி, கமல் ரெடியா இருக்காங்க.. விஜய் வராட்டி பாத்துக்கலாம்.. ஆனா அஜீத் கண்டிப்பா… பரபரப்பாகும் கருணாநிதி நூற்றாண்டு விழா..

By admin on கார்த்திகை 18, 2023

Spread the love

தமிழ் சினிமா வரலாற்றில், அரசியல் வரலாற்றில் தனக்கென்ற முக்கியத்துவத்தை பெற்றவர் கருணாநிதி. தமிழக முதல்வராகவும், திரைப்பட வசனகர்த்தாகவும் அரசியல், சினிமா என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்தவர். இப்போதும் அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினும் தாத்தாவை போல, அரசியல், சினிமா என இரண்டிலும் பயணித்து வருகிறார். அமைச்சரான பின், நடிப்பதை தவிர்க்கும் உதயநிதி, இப்போதும் சினிமா தயாரிப்பாளராக, வெளியீட்டாளராக ரெட் ஜெயின்ட் மூவி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கருணாநிதி இருந்த காலகட்டத்தில், பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா என நடத்தப்பட்டது. அந்த விழாவில் பேசிய அஜீத்குமார், என்னை மிரட்டி இந்த விழாவுக்கு வரவழைத்தனர் என மேடையில் போட்டு உடைக்க, ரஜினிகாந்த் அதற்கு எழுந்து நின்று கைதட்ட. அது பயங்கர வைரலானது.

 Karunanidhi Centenary Celebration

   

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறுகையில், இப்போது கருணாநிதியின் சினிமா பயணத்தை போற்றும் விதமாக, கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு முறைப்படி நேரில் சென்று அழைத்து விழா அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்பதால், சினிமா சார்ந்த ஒரு கலைஞராக அவரை மதிக்கும் விதமாக இந்த விழாவில் நிச்சயமாக பங்கேற்று, கருணாநிதி குறித்து நிச்சயம் பேசுவர் என்பதில் சந்தேகமே இல்லை.

   

 Karunanidhi Centenary Celebration

 

ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி, வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நடிகர் விஜய் இந்த விழாவில் பங்கேற்பாரா, பங்கேற்றால் அவர் பேசினால் அரசியல் விவகாரங்களை தொடுவாரா என்பதெல்லாம் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில், தனது படங்களின் பிரமோ நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காத அஜீத் இந்த விழாவுக்கு வருவாரா, 58 நாள் தொடர் படப்பிடிப்பில் அஜர்பைஜானில் இருகு்கும் அவர் வருவதும் நிச்சயம் உறுதியில்லை. அவர் வருவதற்காக சாத்தியக்கூறு மிக மிக குறைவு என்று கூறி இருக்கிறார் செய்யாறு பாலு. ஆனால் விஜய் வருவது பற்றி கவலை இல்லை, அஜீத் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கும் நிலையில் இந்த விழா இப்போது பரபரப்பாகி வருகிறது.