மீண்டும் உருவாகும் புயல்… தமிழகத்திற்கு வந்த எச்சரிக்கை… கனமழை பொளந்து கட்டும்…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

டிட்வா புயலின் தாக்கத்திலிருந்து தமிழகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வருகின்றது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 12 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது புயலாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அப்படி இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.