திடீரென காணாமல் போன மோதிரம்… கோபத்தில் திட்டிய தாய்… வீட்டிலேயே 17 வயது மாணவி செய்த அதிர்ச்சி செயல்…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை மேல் வாழப்பாடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடைய மகள் கௌரி (17). இவர் சேலம் ஆத்தூர் பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு முன்பு மாணவன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு கௌரியின் கைவிரலில் இருந்த தங்க மோதிரம் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் செல்வி, மோதிரம் எங்கே என்று கேட்டு கண்டித்து வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வெள்ளி மலைக்கு சென்று விட்டார்.

தாய் தன்னை திட்டியதை மனதில் நிறுத்திக் கொள்ள முடியாமல் கௌரி கடும் மனவேதனையில் மூழ்கி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியதாக கூறப்படுகிறது. சில மணி நேரத்திற்கு பிறகு வீட்டுக்கு திரும்பிய செல்வி மயக்கத்துடன் கிடந்த மகளை பார்த்ததும் பதறியும் கேள்வி கேட்டபோது விஷம் குடித்து விட்டதாகவும் கௌரி தெரிவித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டிய வருத்தத்தில் உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவி கௌரியின் மரணம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.