ஆட்டத்தை கலைக்க வரும் வைல்ட் கார்டு என்ட்ரி… 1, 2 இல்லைங்க மொத்தம் எத்தனை தெரியுமா…? அதிரடியாக வெளியான பிக் பாஸ் ப்ரோமோ…

By Begam on ஐப்பசி 23, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி  6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசனும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் புதிதாக இரண்டு வீடுகளாக பிரித்து ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

 

   

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா வெளியேற அடுத்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார் . இதை தொடர்ந்து கடந்த வாரம் நிக்சன், அக்‌ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

   

 

இவர்களில் இந்த வார பிக் பாஸ் வீட்டை விட்டு குறைவான வாக்குகள் பெற்று மக்கள் கோபத்திற்கு ஆளான விஜய் வர்மா  வெளியேற்றப்பட்டுள்ளார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் உள்ள 15 போட்டியாளர்களும் ஆட்டத்தை புரிந்து கொண்டு  விளையாட தொடங்கியுள்ளனர்.  இந்த சமயத்தில் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அனுப்பப்படுவர்.

அந்த அடிப்படையில் தற்பொழுது 1, 2 போட்டியாளர்கள் அல்ல. மொத்தம் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைய உள்ளனர்.  இதனை தற்பொழுது கமலஹாசனே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.இந்த போட்டியாளர்கள் யார் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுதொடர்பான பிக் பாஸ் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த ப்ரோமோ…