தமிழ் சினிமாவில் லியோ படத்தை தாண்டி தற்போது இசையமைப்பாளர் இமான் சொன்ன குற்றச்சாட்டுகள் தான் பெரும் வைரலாகி வருகின்றது. இந்த சர்ச்சை குறித்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கின்றார். சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாடல்கள் மூலமாக மிகப் பெரிய உதவியாக இருந்தவர் டி இமான்.

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர்களது கூட்டணியில் கடைசியாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது வரை அவர் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி மோனிகாவை டி இமான் விவாகரத்து செய்தார். அதற்கு அடுத்த வருடம் அமளி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இமான் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தையும் தான் இந்த ஜென்மத்தில் மன்னிக்க மாட்டேன் மறக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

இந்த விவகாரத்திற்கு பதிலளித்த மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது பிறர் மனை நோக்காமல் என்று திருவள்ளுவர் கூறியதை சிவகார்த்திகேயன் மதிக்காதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம். அதே போல் இந்த விவகாரத்தை பற்றி இமானின் முதல் மனைவி மோனிகா பேசாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஒரு சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என்று கூறும் போதே நமக்கு புரிந்து இருக்க வேண்டும்.

இந்த வீடியோ வைரலாகாமல் இருப்பதற்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ வெளியில் வராமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அத்தனையும் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார் என்றும் அவர் பேசினார். மேலும் அவருக்கு எதிராக பேசுபவர்களுக்கு youtube சேனலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கப்படுகின்றது. இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கின்றது. தேவைப்பட்டால் அதை வெளியிடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
