ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த வினோத் பாரடா மற்றும் அவரது மனைவி நிதி ஆகிய இருவரையும் அப்பகுதி மக்கள் ஒரு முன்மாதிரி தம்பதியாகவே பார்த்து வந்தனர். வினோத் ஒரு கணினிக் பயிற்சி மையம் நடத்தி வந்ததோடு, ஏழை குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் அன்னதானம் போன்ற நற்பணிகளைச் செய்து வந்ததால் ஒட்டுமொத்த ஊரின் மதிப்பையும் பெற்றிருந்தார். ஆனால், இந்த மகிழ்ச்சியான குடும்பத்திற்குப் பின்னால் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றப்போகும் ஒரு கொடூரமான ரகசியம் மறைந்திருந்தது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
கடந்த 2021 அக்டோபர் 21 அன்று, வினோத் தனது பயிற்சி மையத்திற்கு வெளியே அமர்ந்திருந்தபோது, அதிவேகமாக வந்த ஒரு லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அவரது இரண்டு கால்களும் பலத்த முறிவுகளுக்குள்ளாகி, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். வீட்டில் முடங்கிய வினோத்தை அவரது மனைவி நிதி இரவு பகலாகக் கவனித்துக் கொண்டார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தீபக், பிரேக் பிடிக்காததால் தான் இந்த விபத்து நடந்தது எனக் கூறியதால், போலீசாரால் கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களில் ஜாமீனில் வெளியேயும் வந்தார்.
ஆனால், அதே ஆண்டு டிசம்பர் 15 அன்று அந்த குடும்பத்தில் நடந்த மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம், இந்த விபத்தின் மீதான சந்தேகத்தை பலமடங்கு அதிகரித்தது. சாதாரண விபத்தாகக் கருதப்பட்ட இந்த வழக்கு, சுமார் இரண்டரை ஆண்டுகள் தீவிர போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியில், வினோத்தின் மனைவி நிதியின் செல்போனில் இருந்த வாட்ஸ்அப் (WhatsApp) சாட்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, ஒட்டுமொத்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்து அனைவரையும் உரைய வைத்தது. அந்த குறுஞ்செய்திகளில் மறைந்திருந்த திடுக்கிடும் ரகசியங்கள், அது வெறும் விபத்தல்ல, அதற்குப் பின்னால் மிகப்பெரியதொரு சதிவலை பின்னப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தி அனைவரையும் உரைய வைத்தது.
