‘மச்சானை வெட்டிட்டாங்க மாமி’…. நள்ளிரவில் காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி… கணவரின் சடலத்துடன் மனைவி ஆடிய பயங்கர நாடகம்… வெளிச்சத்திற்க்கு வந்த திடுக்கிடும் உண்மை….!

Spread the love

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பூபதி (45), சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சுஜிதாஸ்ரீ (31) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஆட்டுக்காரனூர் ஆற்றுப்பகுதியில் மந்திரித்து கயிறு கட்ட வந்த இடத்தில் மர்ம நபர்கள் கணவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தனது நகையைப் பறித்துச் சென்றுவிட்டதாகவும் பூபதியின் தங்கையிடம் சுஜிதாஸ்ரீ செல்போனில் பதறியபடி தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமலூர் போலீசார், காரின் முன்பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த பூபதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல சந்தேகங்கள் எழுந்தன. பூபதியின் உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் அரிவாளால் வெட்டப்பட்டதாக இல்லாமல், கத்தியால் குத்தப்பட்டதாக இருந்தது. மேலும், காரில் கொலை நடந்ததற்கான எவ்வித தடயங்களும் இல்லை. நகைப்பறிப்பு நாடகத்தில் சுஜிதாஸ்ரீக்கு சிறு காயம்கூட ஏற்படாததாலும், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததாலும் போலீசாரின் சந்தேகப் பார்வை அவர் மீது திரும்பியது. தீவிர விசாரணை நடத்தியதில், சுஜிதாஸ்ரீ தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்றுவிட்டுப் பொய் வழக்கை சோடித்த திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

சுஜிதாஸ்ரீக்கு பல்வேறு நபர்களுடன் தகாத தொடர்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகத் தனது வீட்டிற்கு எதிரே வசிக்கும் பெங்களூரு ஐடி ஊழியரான சந்தோஷ் ராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது விவகாரம் தெரிந்ததும் பூபதி கண்டித்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதில், சுஜிதாஸ்ரீ பூபதியை கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் அடிபட்டு மயங்கிய பூபதியை, உடனடியாக கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜை வீட்டிற்கு வரவழைத்து, இருவரும் இணைந்து கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

கொலைக்குப்பின், பூபதியின் உடலைக் காரின் முன் சீட்டில் அமரவைத்து, ஓமலூர்-தாரமங்கலம் சாலையில் உள்ள சரபங்கா ஆற்றுப்பகுதிக்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். பின்னர், மர்ம நபர்கள் நகைக்காகக் கொலை செய்துவிட்டதாகக் கூறி நாடகமாடியது அம்பலமானது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சுஜிதாஸ்ரீயை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“என்னை விடுங்க சார்…” 16 வயது மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஊழியர்…. பள்ளியில் வைத்து அத்துமீறல்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

8 மணத்தியாலங்கள் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

8 மணத்தியாலங்கள் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

8 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

8 மணத்தியாலங்கள் ago