புற்றுநோயுடன் போராடிய மனைவி… உயிரை காப்பாற்ற கைகொடுத்த சக்கரவள்ளி கிழங்கு… மகிழ்ச்சியால் பூரித்துப்போன கணவர்.. மனிதநேயம் இன்னும் இருக்குது..!!

By Soundarya on தை 7, 2026

Spread the love

சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ‘லி’ என்ற பெண்ணின் சிகிச்சைக்காக, ‘பாங்’ என்ற மனிதநேயமிக்க நபர் 50,000 கிலோ சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைத் தானமாக வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. லியின் கணவர் ஜியா, தனது மனைவியின் மருத்துவச் செலவுகளுக்காகத் தன்னிடம் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டுப் பணமின்றித் தவிப்பதைக் கண்ட பாங், ஒரு ஏழை விவசாயியிடமிருந்து இந்த விளைபொருட்களைக் கொள்முதல் செய்து ஜியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது அந்தச் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை விற்பனை செய்து வரும் ஜியா, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தனது மனைவியின் மருத்துவச் செலவுகளைக் கவனித்து வருகிறார். இக்கட்டான சூழலில் ஒருவருக்குப் பணமாக உதவாமல், அவர் வாழ்வாதாரத்தைத் தொடரும் வகையில் கிழங்குகளைத் தானமாக வழங்கிய பாங்கின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.