“இன்னைக்கே அவன் கதையை முடிச்சிடு!” – வீடியோ காலில் கள்ளக்காதலன் கொடுத்த ஆர்டர்… போனை செக் செய்த கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… அடுத்த நொடியே மனைவி செய்த பயங்கரம்…!

By Nanthini on ஆனி 17, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் புல்கான பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மனீஷ் குப்தா என்பவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிஹாரிகா என்ற பெண்ணைக் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரியான்ஸ் என்ற 6 வயது மகன் உள்ளான். திருமணத்திற்குப் பிறகு நிஹாரிகா தனது ஆசிரியர் பணியைத் துறந்து குடும்பத்தைக் கவனித்து வந்த நிலையில், மனீஷ் குப்தா சொந்தமாக மளிகைக் கடை ஒன்றை நடத்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலமாக ஜம்முவைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் நிஹாரிகாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் அவர்களுக்குள் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவாக மாறியுள்ளது. இதனால் நிஹாரிகா எப்போதும் தனது செல்போனிலேயே மூழ்கி இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு வந்துள்ளன. ஒருகட்டத்தில், நிஹாரிகா தனது ஆண் நண்பருடன் வீடியோ காலில் பேசுவதை அவரது 6 வயது மகன் பார்த்து, தனது தாத்தா ராம்கிஷோரிடம் கூறவே, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

   

இதனால் அதிர்ச்சியடைந்த மனீஷ், மனைவியின் செல்போனைச் சோதித்துப் பார்த்து அவரது கள்ளத்தொடர்பை உறுதி செய்தார். மனைவியைக் கடுமையாகக் கண்டித்த மனீஷ், அவரைத் திருந்தி வாழுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும், நிஹாரிகா தனது ஆண் நண்பருடனான தொடர்பைத் தொடரவே செய்துள்ளார். கடந்த ஜூன் 5 ஆம் தேதி மதியம், மனீஷ் கடைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது, நிஹாரிகா வழக்கம் போல் தனது கள்ளக்காதலனுடன் பேசியுள்ளார். இதனை மனீஷ் மீண்டும் கண்டித்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

   

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற நிஹாரிகா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவர் மனீஷின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். அப்போது போன் இணைப்பில் இருந்த அவரது கள்ளக்காதலன், “இன்றைக்கே அவன் கதையை முடித்துவிடு” என்று கூறி தூண்டியதாகத் தெரிகிறது. மனீஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தந்தையும் அக்கம் பக்கத்தினரும், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மனீஷ் நேற்று (ஜூன் 16) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், நிஹாரிகாவைக் கைது செய்து, தலைமறைவாக உள்ள ஜம்மு வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.