நள்ளிரவில் தோப்புக்குள் ஓடிய மனைவி… முட்புதரில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒட்டுமொத்த ஊரே திரண்டு பார்த்த கோரக் காட்சி…!

Spread the love

பெரம்பலூர் மாவட்டம் பிம்பலூர் கிராமத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவனுக்குத் தெரியாமல், தான் பெற்றெடுத்த ஆண் குழந்தையை முட்புதரில் வீசி கொன்ற தாயின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் என்பவர் கடந்த 16 மாதங்களாக மாலத்தீவில் வேலை பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது தனது மனைவி கோவிந்தம்மாளின் வயிறு பெரிதாக இருப்பதைப் பார்த்து கேட்டதற்கு, அவர் உடல் பருமனினால் ஏற்பட்ட தொப்பை என்று கூறி கணவரை நம்ப வைத்துள்ளார்.

உண்மையில் கோவிந்தம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி இரவு திடீரென வயிற்று வலிப்பதாகக் கூறிவிட்டு வீட்டுக்கு வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அவரைத் தேடிச் சென்றபோது, அருகில் உள்ள தைலத்தோப்பில் கோவிந்தம்மாள் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு பதறிப்போனார். உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் கோவிந்தம்மாளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குச் சற்று நேரத்திற்கு முன்புதான் பிரசவம் நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தேடியபோது, அங்குள்ள முட்புதரில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தை சடலமாகக் கிடப்பதைக் கண்டு மீட்டனர். கணவர் வெளிநாட்டில் இருந்த சமயத்தில் ஏற்பட்ட கள்ளக்காதல் உறவினால் இந்தக் குழந்தை பிறந்தது விசாரணையில் தெரியவந்தது.

கணவரிடம் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில், நள்ளிரவில் தனியாகக் குழந்தையைப் பெற்றெடுத்து அதனை முட்புதரில் வீசி எறிந்ததாக முதற்கட்ட விசாரணையில் அம்பலமானது. இந்தச் சம்பவம் குறித்து வீகாளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தால் பெற்ற குழந்தையையே கொன்ற தாயின் கொடூரச் செயல் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

3 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

3 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

3 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

3 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

4 மணத்தியாலங்கள் ago