பயமா இருக்கு..! காவலாளி அஜித்குமார் போல என் கணவரை… தயவுசெஞ்சி அவரை என் கண்ணுல காட்டுங்க… கைது செய்யப்பட்ட TVK செயலாளரின் மனைவி கண்ணீர்..!!

Spread the love

கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது குறித்து அவருடைய மனைவி அளித்துள்ள பேட்டியில், “எங்களுடைய குடும்பம் முழுவதும் விஜயின் தீவிர ரசிகர்கள். விஜய் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து என்னுடைய கணவர் அவருடைய ரசிகர். கடந்த 27ஆம் தேதி பிரச்சாரம் நடைபெறுவதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி சென்றவர்தான் இப்போது வரை வீடு திரும்பவில்லை. எங்கு இருக்கிறா?ர் என்ன செய்கிறார்? என்பது தெரியவில்லை. அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் வந்தது. நானும் விஜயின் தீவிர ரசிகை. பிரச்சாரம் நடைபெற்ற இடத்திற்கு நானும் என்னுடைய இரண்டு மகன்களும் சென்றிருந்தோம்.

விஜய் பிரச்சாரத்திற்கு வரும் வரை அங்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அவர் பிரச்சார வாகனம் வந்து நின்று பேச ஆரம்பித்த பிறகுதான் பிரச்சனை ஆரம்பித்தது. செருப்பு  வீசுவது,   ஒருத்தரை ஒருத்தர் தள்ளி விடுவது அடிப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்தது. உண்மையில் விஜய்யின் உண்மையான தொண்டர்கள் அப்படி செய்ய வாய்ப்பில்லை. வேண்டுமென்றே ஒரு கும்பலை உள்ளே இறக்கிவிட்டு அதை   நடத்தியது போல தான் இருந்தது. என்னையும் அருகில் இருந்த சாக்கடை பள்ளத்தில் தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்தார்கள். மிகவும் சிரமப்பட்டு தான் தப்பித்து வந்தேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று தான் வீடு திரும்பினேன். என்னுடைய கணவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்ததே தவிர அது தொடர்பான வீடியோ எதுவும் வரவில்லை. பிரச்சாரம் முடிவதற்கு முன்பு வரை எங்களிடம் பேசிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் இப்போது வரை எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரை போலீசார் பயங்கரமாக தாக்குவார்களோ என்று பயம் உள்ளது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரு வேண்டுகோள் தான் வைக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்திருக்கிறீர்கள்? அவர் எப்படி இருக்கிறார்? என்பதை மட்டும் சொல்லுங்கள். என்னுடைய கண்ணில் அவரை காட்டுங்கள்” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Soundarya

Recent Posts

‘ஆட்சி அமைத்தாலும் இது இல்லைனா கஷ்டம்’… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் பி.ஆர். சுந்தர் உடைத்த உண்மை… அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…

3 minutes ago

“நண்பனுக்காக போன் செய்த அஜித்” – விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ‘தல’ கொடுத்த சர்பிரைஸ்…!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…

11 minutes ago

50 ஆண்டுகால திராவிட அரசியலை ஓரம் கட்டிய விஜய்… சைலண்ட்டாக சம்பவம் செய்த தளபதி… தமிழக அரசியலில் மெகா புரட்சி..!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…

13 minutes ago

பாத்திரம் கழுவும் பெண் டூ MLA..! 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… மாபெரும் புரட்சி செய்த பிரதமர் மோடி..!!

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…

19 minutes ago

BREAKING: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்… அரியணை ஏறும் விஜய்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…

20 minutes ago

“அப்பா இனி நான் என்ன செய்வேன்” பத்திரிகை கொடுத்து முடித்த தந்தை.. மாப்பிள்ளை வரும் முன்பே வந்த எமன்… திருமணத்திற்கு 6 நாட்களுக்கு முன் நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…

26 minutes ago