கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் ரவுடி சுரேஷ் (43). இவர் கடந்த அக்டோபர் 23-ம் தேதி வீட்டில் இறந்து கிடந்த நிலையில், உடல்நலக் குறைவு மற்றும் நெஞ்சுவலி காரணமாக அவர் இறந்ததாக அவரது மனைவி பாரதி (37) தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையின்போது சுரேஷின் கழுத்தில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், சுரேஷின் மனைவி பாரதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் தொடக்கத்தில் கணவர் இயற்கையாகவே இறந்ததாக அவர் நாடகமாடிய போதிலும், கிடுக்கிப்பிடி விசாரணைக்குப் பிறகு அவரே கணவரைக் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
மது அருந்திவிட்டு வந்து செல்போனில் வீடியோக்களைப் பார்த்து தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாலும், தகாத முறையில் நடந்து கொண்டதாலும் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே கணவரைக் கொலை செய்ததாக பாரதி வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கை கொலை வழக்காக மாற்றிய பூதப்பாண்டி போலீசார், பாரதியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…