மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்ய மனைவி தனது காதலனுடன் சேர்ந்து மின்சாரம் பாய்ச்சிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பங்டி கிராமத்தைச் சேர்ந்த கஜானன் மோர் (38) என்பவரின் மனைவி கவுடி மோர், விஷ்ணு ஆத்ராம் என்பவருடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார். இவர்களது காதலுக்கு கஜானன் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
மே 3-ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில், கஜானன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கவுடி மோர் மின்சார வயரில் அலுமினியக் கம்பியை இணைத்து கஜானனின் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். மின்சாரம் தாக்கியதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு கஜானன் வலியால் அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிர்ஷ்டவசமாக கஜானன் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலன் விஷ்ணுவின் தூண்டுதலின் பேரில் மனைவி கவுடி மோர் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த வடகான் ஜங்கிள் போலீஸார், கவுடி மோர் மற்றும் அவரது காதலன் விஷ்ணு ஆத்ராம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி,…
மும்பை காரில் உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்த விபத்தில் இரண்டு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத் திட்டத்தை அமெரிக்க…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…
தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…
பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், கசூர் அருகே உள்ள கண்டா சிங் எல்லைப் பகுதியில் நின்று கொண்டு, தான் மிக…