“சட்டை பாக்கெட்டில் வீரிய மாத்திரை அட்டைகள்…” கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பிளான்…. தூங்கியவுடன் கணவருக்கு நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆடி 27, 2026

Spread the love

கணவர் தூங்கியவுடன் கள்ளக்காதலனைத் வீட்டிற்கு வரவழைக்கும் பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், இந்தச் சம்பவத்தைச் இயல்பான மரணமாகக் காட்டத் திட்டமிட்ட அந்தப் பெண், வீரிய மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதால் கணவர் உயிரிழந்தது போல் சித்தரிக்க முயன்றுள்ளார். இதற்காகக் கொலையுண்ட கணவரின் ஆடைப் பாக்கெட்டில் காலியான மாத்திரை அட்டைகளையும் போட்டு நாடகமாடியுள்ளார்.

ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் மனைவியின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, கள்ளக்காதலனுடன் அவர் தொடர்ந்து பேசியது தெரியவந்தது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட கெடுபிடி விசாரணையில், மனைவியான ஷபானாவும் அவரது கள்ளக்காதலன் ரேஹானும் சேர்ந்து இக்கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டதால் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.