கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகர் பகுதியில் சேர்ந்த சூர்யா (23) – முத்துலட்சுமி (20) ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (25) என்பவருடன் முத்துலட்சுமிக்கு திருமணம் ஆகி இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முத்துலட்சுமிக்கு திருமணமான போதும் காதலன் சூர்யா என்பவர் தான் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் சரவணனுக்கு தெரிய வந்ததால் முத்துலட்சுமியையும் சூர்யாவையும் பலமுறை கண்டித்துள்ளார். முத்துலட்சுமியை கணவன் கண்டிப்பதை கள்ளக்காதலன் சூர்யாவிடமும் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் சரவணன் மனைவி முத்துலட்சுமி கள்ளக்காதல் குறித்து கேள்வி கேட்டேன் நீண்ட நேரம் சண்டை போட்டுள்ளார். இது பற்றி முத்துலட்சுமி கள்ளக்காதலன் சூர்யா என்பவருக்கு போனில் கணவன் தொந்தரவு செய்வதை கூறியுள்ளார். ஏற்கனவே கஞ்சா போதையில் இருந்த சூர்யா அவருடைய நண்பர் சக்தி ஆகிய இருவரும் ஓசூர் பார்வதி நகரில் உள்ள சரவணன் வீட்டுக்கு சென்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சரவணன் இடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். சரவணன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த முத்துலட்சுமி மற்றும் தாய் இருவரும் அலரி துடித்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக முத்துலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அங்கு சுற்றி திரிந்த சூர்யாவை மற்றும் அவருடைய நண்பரை கைது செய்தனர். இது குறித்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் இடையே இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
