விஜய் எல்கேஜி ஸ்கூல் பையன், முதலில் படிச்சிட்டு வரட்டும்… லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பொன்முடி…!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் விஜய் வருகை என்பது அரசியல் களத்தில் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுகவிற்கு விஜய் வருகை என்பது மிகப்பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் மாற்றுக் கட்சியினர் பலரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் தொடர்ந்து இணைந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு சுமார் 25 நாட்கள் கழித்து விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது, ஒரு மீட்டிங் மட்டும் போட்டு விட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கார், எல்கேஜி படிச்சிட்டு இருக்காரு என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன்முடி, விஜய் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது.

   

பொதுவெளியில் ஒரு மீட்டிங் போட்டு விட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டு வருகிறார். கரூரில் மக்கள் அளித்த பாடத்தால் தான் அவர் கற்றுக்கொண்டு புதுச்சேரிக்கு சரியான நேரத்திற்கு சென்றுள்ளார். அவரு இப்போதான் ஏதோ கொஞ்சம் லெசன் எல்கேஜி படித்துக்கொண்டு இருக்காரு, முதலில் படித்துவிட்டு வரட்டும் பிறகு பேசி கொள்ளலாம் என்று பொன்முடி விமர்சனம் செய்துள்ளார்.