“கணவரை கொன்று இரவு முழுவதும் சடலத்துடன்.. மனைவி செய்த காரியம்”… அதிர்ந்துபோன உ.பி… கதவைத் திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on சித்திரை 1, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த பெண் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்லௌதி கலா கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் முகமது மெஹ்ராஜ் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவர். மெஹ்ராஜின் மனைவி ரூஹிக்கும், அவரது உறவினரான ஃபர்மான் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த மெஹ்ராஜ் கடுமையாக எதிர்த்ததால், அவரைத் தீர்த்துக்கட்டிவிட்டு இருவரும் சேர்ந்து வாழத் திட்டமிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திட்டத்தின்படி, கடந்த சனிக்கிழமை இரவு ரூஹி தனது கணவரின் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மெஹ்ராஜ் நினைவிழந்த பிறகு, தனது காதலன் ஃபர்மான் மற்றும் அவரது நண்பர் அட்னான் ஆகியோரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து மெஹ்ராஜின் கை, கால்களைக் கயிற்றால் கட்டி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அதிர்ச்சிகரமான விஷயமாக, கொலை செய்த பிறகு எவ்வித சலனமுமின்றி ரூஹி தனது இரண்டு குழந்தைகளுடன், கணவரின் சடலத்திற்கு அருகிலேயே அன்று இரவு முழுவதும் உறங்கியுள்ளார்.

   

மறுநாள் காலை மெஹ்ராஜின் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். ஆரம்பத்தில் கொள்ளையர்கள் புகுந்து தனது கணவரைக் கொன்றதாக ரூஹி நாடகமாடினார். இருப்பினும், அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்தது. தற்போது மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்திகள் மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீசார், மேலதிக விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.