நகைக்கடன் விதிகளில் இன்று(ஏப்ரல் 1) முதல் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வருவதால், பொதுமக்கள் தங்கள் நகையின் மதிப்பிற்கு ஏற்ப பெறும் கடன் தொகையில் கணிசமான வேறுபாடுகள் ஏற்படவுள்ளன. புதிய நடைமுறையின்படி, ₹2.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள நகைகளுக்கு அதன் மதிப்பில் 85% வரை (அதாவது அதிகபட்சமாக ₹2.12 லட்சம்) கடனாகப் பெற முடியும். நடுத்தர அளவிலான கடன்களுக்கு, அதாவது ₹2.50 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை மதிப்புள்ள நகைகளுக்கு 80% வரை கடன் வழங்கப்பட உள்ளது.
அதேசமயம் ₹5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பெரிய அளவிலான நகைகளுக்கு 75% மட்டுமே கடன் தொகையாக அனுமதிக்கப்படும். இந்த புதிய ஸ்லாப் முறையினால், அதிக மதிப்புள்ள நகைகளை அடமானம் வைப்பவர்கள் பெறும் கடன் அளவு சற்று குறைய வாய்ப்புள்ளதால், கடன் வாங்குவோர் இந்த விகிதாச்சார மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு திட்டமிடுவது அவசியமாகும்.
