ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவிக் கொலை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பஜன்லால் என்ற 32 வயது இளைஞர் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பஜன்லாலின் மனைவி இந்திரா தேவி, பிரபு தயாள் என்ற தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்தச் சதிக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. கடந்த ஜனவரி 13-ம் தேதி பஜன்லால் வேலை முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் மறித்த கள்ளக்காதலனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பஜன்லாலின் உடலையும் அவரது பைக்கையும் அருகிலிருந்த இந்திரா காந்தி கால்வாயில் வீசியுள்ளனர். உடல் வீசப்பட்ட இடத்திலிருந்து சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில் பல நாட்களுக்குப் பிறகு சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டபோது, அது தன் கணவர் இல்லை என்று கூறி இந்திரா நாடகமாடியுள்ளார். இருப்பினும், போலீஸார் சந்தேகத்தின் பேரில் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கணவர் கொல்லப்பட்ட நேரத்தில் இந்திரா தனது கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்தது உறுதியானது. இதையடுத்து மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…