இதென்ன கொடுமை.? 7 வயது மகனின் கண் முன்னே தந்தை பலி… தாய் செய்த கொடூரச்செயல்..!!

By Meena on ஆவணி 5, 2025

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது மகன் கண் முன்னிலையில் தன்னுடைய கணவரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முகேஷ் பர்மருக்கும் அவரது மனைவி  சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் இருவரும் சண்டை போட்டு உள்ளார்கள். கோபமடைந்த சங்கீதா கணவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே கணவர் முகேஷ் பர்மர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது சங்கீதா எழுதிய தற்கொலை கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணையில் இருவருக்கும் திருமணமான நாளிலிருந்தே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது அது மட்டுமின்றி நிதி பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.