திரையரங்கில் தற்போது தலைவன் தலைவி படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் இயக்குனர் பாண்டியராஜ். இந்நிலையில் இவரது பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் சிம்பு இவர்களுக்கு இடையே பிரேக்கப் செய்து கொண்ட நிலையில் மீண்டும் எப்படி “இது நம்ம ஆளு” படத்தில் நடிக்க வைத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த இயக்குனர் பாண்டிராஜ் முதலில் நான் இது நம்ம ஆளு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நஸ்ரியாவை தேர்ந்தெடுத்தேன்.
அப்போது ராஜா ராணி படம் வந்து நல்ல போயிட்டு இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நஸ்ரியாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹீரோயினை கமிட் செய்யாமலே சுமார் 20 நாட்கள் சிம்பு வைத்து மட்டுமே போன் பேசும் காட்சிகளை எடுத்தேன். நடிகர் சிம்பு அவர்கள் அந்தப் பக்கம் யார் நடிக்க போறாங்கன்னு தெரியாமலே நடித்தார். ஒரு நாள் திடீரென இந்த படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. இயக்குனர் பாண்டிராஜ் சிம்புவிடம் உங்களுக்கு நயன்தாரா நடித்த ஓகேவா என்று கேட்டேன்.
அதற்கு சிம்பு அவர்கள் நடிக்க ஓகே சொன்னால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னார். நம் படத்துக்கு பாலசுப்ரமணியன் தான் ஒளிப்பதிவாளர். அவர்தான் “இது கதிரவன் காதல் படத்துக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர். இவர்தான் நயன்தாராவிடம் பேசினார். நயன்தாரா எனக்கு சிம்புவுடன் நடிக்க எந்த பிரச்சனையும் இல்லை, கதை பிடித்து இருந்தால் நடிக்கிறேன்னு சொல்லிவிட்டார். இயக்குனர் பாண்டியராஜ் நயனிடம் போனில் கதை சொல்லும் பொழுது அவர் சிரித்து சிரித்து கதை கேட்டதாக கூறியிருந்தார். அதன் பின்னர் படப்பிடிப்புச் சென்று அந்த படத்தை ஒரு வழியாக முடித்து விட்டோம்” என்று கூறியுள்ளார்.
