அடச்சீ… நீயெல்லாம் மனுஷியா… கணவன் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால் கொடூரம்… காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று புதைத்த மனைவி… நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on ஆவணி 29, 2026

Spread the love

பரிகாபாத்தில் மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து கணவரைக் கொலை செய்து உடலைப் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொஜாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஷியாம்வீர் (42) என்பவரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கமாத் என்பவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், கமாத்திற்கும் ஷியாம்வீரின் மனைவி கேசவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஷியாம்வீருக்குத் தெரியவந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து, இருவரும் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 16 அன்று, கமாத் ஷியாம்வீருக்கு மது கொடுத்துவிட்டு, அவர் மதுபோதையில் இருந்தபோது இன்டர்லாக்கிங் டைல்ஸ் கொண்டு தலையில் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலைச் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க கேசவ் வீட்டின் கதவை வெளியிலிருந்து பூட்டியுள்ளதுடன், பின்னர் இருவரும் சேர்ந்து ஷியாம்வீரின் உடலை வீட்டின் அருகிலுள்ள ஒரு குழியில் புதைத்துவிட்டனர்.

   

ஷியாம்வீரைக் காணவில்லை எனச் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு வந்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான பதில்கள் கிடைத்துள்ளன. அருகில் புதர்கள் மண்டி கிடந்த பகுதியைத் தோண்டிப் பார்த்தபோது ஷியாம்வீரின் உடல் கண்டெடுக்கப்பட்டது; இதனைக் காவல்துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததுடன், புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கேசவ் மற்றும் கமாத் ஆகிய இருவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.