ஐயோ அவங்களைக் காப்பாத்துங்க… ரத்தத்தில் நனைந்த வாலிபர்… கதறிய மனைவி மற்றும் குழந்தை… நெடுஞ்சாலையில் அரங்கேறிய கொடூரம்… நடுங்கவைக்கும் பகீர் சிசிடிவி காட்சி…!

By Swetha on ஆவணி 29, 2026

Spread the love

புனே – சாரா நெடுஞ்சாலையில் உள்ள சரோலா கிராமத்தில் ஒரு இளைஞர் கொடூரமாகக் கத்திக் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் ஒரு பெண்ணுடனும் குழந்தையுடனும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர் திடீரென அவா் மீது கத்தித் தாக்குதல் நடத்தியுள்ளாா்.

இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், குற்றவாளியைப் பிடிக்க அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/rameshofficial0/status/2093296810572014047/video/1

   

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த ராஜ்கட் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளியை அடையாளம் காணும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த படுகொலைக்கான உண்மையான நோக்கம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.