“புருஷனை கொன்னுட்டு நாம சந்தோசமா இருக்கலாம்”… கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்… காட்டுக்குள் அழுகி கிடந்த சடலம்… மனைவி செய்த உச்சகட்ட கொடூரம்…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கரிவிடி பகுதியைச் சேர்ந்த நாகராஜு என்பவரின் கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜு மற்றும் ரம்யா தம்பதியினருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் விசாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்தனர். அங்கு நாகராஜு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் ரம்யாவிற்கு வசந்த் ராவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் ரம்யா தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் நாகராஜுவுக்குத் தெரியவரவே அவர் தனது மனைவியைக் கண்டித்ததோடு கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ தடையாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக வசந்த் ராவ் மற்றும் மேலும் இருவருக்கு ரூ.50,000 பணம் கொடுத்து கணவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். கடந்த டிசம்பர் மாதம் வேலைக்குச் சென்ற நாகராஜுவை வழிமறித்த அந்த கும்பல் அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு உடலை திம்மாபுரம் காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டுத் தப்பியோடியது.

   

தனது மகனைக் காணவில்லை என நாகராஜுவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் நாகராஜுவுடையது என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரம்யாவின் அலைபேசி அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் வசந்த் ராவுடன் அடிக்கடி பேசியது அம்பலமானது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை ரம்யா ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தில் ரம்யா, வசந்த் ராவ் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.