தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கூலிப்படை வைத்து மனைவியே எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹனுமகொண்டா மாவட்டம், பரகலா டவுனைச் சேர்ந்த சுமன் (36) மற்றும் லாவண்யா தம்பதியினருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த சுமனுக்கும், நகராட்சியில் தூய்மைப் பணியாளராக இருந்த லாவண்யாவுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பணியிடத்தில் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் லாவண்யாவுக்குத் திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியுள்ளது.
இந்த சட்டவிரோத உறவு குறித்து கணவன் சுமனுக்குத் தெரியவந்ததையடுத்து, தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது காதலுக்குக் கணவர் தடையாக இருப்பதாகக் கருதிய லாவண்யா, அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதற்கு முன்னதாக இரண்டு முறை அவரைக் கொல்ல முயன்று தோல்வியடைந்த நிலையில், எப்படியாவது அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது சக ஊழியரின் உதவியுடன் கோவிந்தராவ்பேட்டைச் சேர்ந்த ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்துக் கூலிப்படையாக ஏவியுள்ளார்.
கடந்த 4-ம் தேதி உறவினர் வீட்டிற்குச் சென்றபோது சுமன் மாயமானதாக லாவண்யா நாடகமாடியுள்ளார். சுமனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது, முலுகு மாவட்டம் கோவிந்தராவ்பேட் பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டது. செல்போன் சிக்னல் மற்றும் தடயங்களை ஆய்வு செய்ததில், அது சுமன் என்பதும், கூலிப்படையினர் அவரை மது அருந்த வைத்து, பீர் பாட்டில்களால் குத்திக் கொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்கப் பெட்ரோல் ஊற்றி எரித்ததும் அம்பலமானது.
லாவண்யாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலுக்காகத் தனது கணவனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். லாவண்யாவைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கூலிப்படையினரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி சுமனின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…