ஐயோ… கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவருக்குப் போட்ட பிளான்… போலீசிடம் வசமாகச் சிக்கிய கில்லாடி மனைவி… தென்காசியில் பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பண்பொழியில் கடந்த 10-ஆம் தேதி தோட்டம் ஒன்றில் ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் உள்ள பண்பொழி-தென்காசி சாலையில் பொருத்தப்பட்டிருந்த 26 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அந்த கேமரா காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்ட இசை இந்திரகுமார் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்த கொலை வழக்கில் மிகப்பெரிய திடீர் திருப்பம் ஏற்பட்டது.

   

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின், இக்கொலை வழக்கில் தொடர்புடைய இசை இந்திரகுமாரைப் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், அவருடன் தொடர்புடைய அம்சா நிஷா என்பவரைக் கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் போலீசார் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.