உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த டேனிஷ் என்பவருக்கும் பாக்தாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே டேனிஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதோடு சூதாட்டம் ஆடி வந்துள்ளார். சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் பொருட்கள் என நிறைய இழந்துள்ளார். இந்நிலையில் தன் மனைவியிடம் அவருடைய வீட்டுக்குச் சென்று நகை மற்றும் பணம் வாங்கி வரச் சொல்லி அடிக்கடி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் வாங்கி வராததால் தினமும் பணம் கேட்டும் நகை வாங்கி வர சொல்லியும் மனைவி மீது டேனிஸ் ஆத்திரத்தில் இருந்து உள்ளார்.
இந்நிலையில் தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்குச் சென்று அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் அவரால் சூதாடாமல் இருக்க முடியாததால் என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்கு பதிலாக தன்னுடைய மனைவியை பனையம் வைத்து சூதாடியுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்றுப்போன நிலையில் தன் மனைவியை இழக்க நேரிட்டது. பனயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று வெற்றி பெற்றவர்களிடம் ஒப்படைத்துள்ளார். சூதாட்டத்தில் வெற்றி பெற்ற எட்டு பேர் கொண்ட கும்பல் அவருடைய மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கியுள்ளனர். இதனை கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த எட்டு பேர் கொண்ட கும்பலும் அவருடைய மனைவியை ஈவு இரக்கமில்லாமல் கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்தப் பெண் மிகவும் பலவீனமடைந்த நிலையில் எட்டு பேர் கொண்ட கும்பலுடன் கணவனும் சேர்ந்து மனைவியை துன்புறுத்தி ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், எனக்கு திருமணம் நடந்தது முதல் வரதட்சணைக்காக நான் தினமும் சித்திரவதை செய்யப்பட்டேன். என்னுடைய கணவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால் அவர் என்னை பணயத்தில் வைத்து விட்டார். அதன் பிறகு எட்டு பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். என் மாமனார் என்னை பாலியல் வன்கொடுமை செய்து நான் வரதட்சனை கொண்டு வராததால் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். என்னுடைய கர்ப்பம் கலைக்கப்பட்டது. என்னை கொலை செய்யும் நோக்கத்தில் ஆற்றில் தள்ளி விட்டனர் என்று அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் காரணமாக, சைபர் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக…
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…