பெற்ற தாயே செய்ய தயங்கும் விஷயம்… கணவனுக்கு தயங்காமல் செய்த மனைவி… வாழும் பார்வதி தேவியாக மாறிய நெகிழ வைக்கும் சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரியா என்ற பெண் கணவரை நீண்ட ஆயுளுக்காக கொண்டாடப்படக்கூடிய கார்வா சவுத் பண்டிகையின் உணர்வை ஒரு உயிர் கொடுக்கும் செயலாகவே மாற்றியுள்ளார். அவருடைய கணவர் புருஷோத்தம் என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது குடும்பத்தினர் அனைவரும் பயந்து பின்வாங்கிய நேரத்தில் பிரியா சற்றும் தயங்காமல் “என் சிறுநீரகம் என் கணவரின் உயிரை காப்பாற்றுமானால், அதுதான் என் உண்மையான கார்வா சவுத்” என்று உறுதியுடன் தன் சிறுநீரகத்தை கணவருக்காக தானம் செய்ய அந்தப் பெண் முன்வந்துள்ளார்.

பொருத்தமான சிறுநீரகம் வெற்றிகரமாக அவருக்கு பொருத்தப்பட்டு குணமடைந்தார். தன் மனைவி தனக்கு அளித்த இரண்டாவது வாழ்க்கை எனவும் பிரியா தனக்கு கிடைத்த பார்வதி தேவி என்றும் புருஷோத்தம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பிரியாவை பொருத்தவரையில் இந்த பண்டிகை தற்போது சந்திரனை பார்ப்பது மட்டுமல்ல அவர் மீட்டெடுத்த தனது வாழ்க்கையை கொண்டாடுவதாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் திருமணம் ஆன பெண்கள் நிலவு உதயமாகும் வரை உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் விரதம் இருந்து இந்த பண்டிகையை கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கது.