“இ-ரிக்‌ஷாவை சவாரிக்காக புக் செய்து ஸ்கெட்ச்…” கணவரை கொன்று நாடகமாடிய மனைவி…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம் இட்வா பகுதியைச் சேர்ந்த ஹரிச்சந்திரா அக்ரஹரி (40) என்ற மின்சார ஆட்டோ ஓட்டுநர், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சவாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் புகாரளிக்கவே, போலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் புத்தி ராப்தி ஆற்றின் பாலத்தின் அருகே ரத்தக்கறைகளுடன் அவரது ஆட்டோவும், ஆற்றுக்குள்ளிருந்து அவரது சடலமும் மீட்கப்பட்டது.

ஆரம்பத்தில் விபத்து என சந்தேகிக்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலிசார் நடத்திய தீவிர விசாரணையில், ஹரிச்சந்திராவின் மனைவி மாயாதேவிக்கும், நியாஸ் அகமது என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது அம்பலமானது. மதுவிற்கு அடிமையான ஹரிச்சந்திரா மனைவியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதால், கணவனைத் தீர்த்துக்கட்ட மாயாதேவியும் அவளது கள்ளக்காதலனும் திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக இர்ஷாத் மற்றும் அப்துல்லா ஆகிய இரு கூலிப்படை நபர்களை ரூ.1.10 லட்சத்திற்குப் பேசி, ரூ.60,000 முன்பணமும் கொடுத்துள்ளனர். திட்டமிட்டபடி ஹரிச்சந்திராவின் ஆட்டோவைச் சவாரிக்கு புக் செய்து தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை ஆற்றில் வீசியுள்ளனர். இந்த நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மனைவி மாயாதேவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேரையும் அதிரடிப்படை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

“மக்களிடம் கேட்காம பண்ண முடியாது”…. பரந்தூர் உதாரணத்தை காட்டி விஜய்க்கு திருமாவளவன் போட்ட செக்… முதலமைச்சருக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்…!

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…

42 seconds ago

“9 நாளா மார்ச்சுவரில கிடக்கும் என் புள்ள”… கதறி அழுத தமிழ்ச்செல்வனின் தாய்.. மதுரையில் வீதியை அலறவிட்ட முற்றுகை போராட்டம்….!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…

7 minutes ago

தேர்தல் ஆணையத்திற்கே ஷாக்…. அறிவிப்பே வரல… அதுக்குள்ள வேட்பாளரை தூக்கி அடித்த செங்கோட்டையன்…. அதிர்ந்துபோன விஜய்…..!

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…

41 minutes ago

“காங்கிரஸுக்கு டாட்டா?”…. டெல்லி அரசியலில் ஸ்டாலினின் ‘சீக்ரெட் பிளான்’… கனிமொழி இறக்கிய அதிரடி மூவ்….!

தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…

52 minutes ago

ஸ்டாலின் போட்ட ஒரே போன் கால்…. சட்டென மாறிய அரசியல் களம்…. தேமுதிகவின் அதிரடி முடிவு…. இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…

60 minutes ago

“மை லவ்லி பிரதர் அஜித்…” நடிகர் அஜித்திற்கு பரிசு வழங்கிய முதல்வர் விஜய்…. பதிலுக்கு அஜித் என்ன கொடுத்தார் தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…

1 மணத்தியாலம் ago