“கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை”.. பச்சிளம் மகனை மடியில் கிடத்தி இளம்பெண் செய்த காரியம்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…!

Spread the love

ஐதராபாத்தில் திருமண நாளன்று ஏற்பட்ட சிறு குடும்பத் தகராறு, ஒரு தாயையும் அவரது ஐந்து வயது மகனையும் பலிகொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. போரபண்டா பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் முரளி வேணு என்பவரது மனைவி சத்தியவதி, தங்களது திருமண நாளன்று குழந்தைகளுடன் வெளியே செல்ல விரும்பியுள்ளார். ஆனால், முரளி வேணு அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி குளிப்பதற்கு வெந்நீர் வைத்தது தொடர்பாக மனைவியிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவனின் தொடர்ச்சியான சிடுமூஞ்சித்தனமும், அலட்சியப் போக்கும் அந்த இளம்பெண்ணை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கணவனுடன் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்த சத்தியவதி, விபரீத முடிவை கையில் எடுத்தார். ஆத்திரத்திலும் விரக்தியிலும் தனது ஐந்து வயது மகன் ருத்ரன் மற்றும் இரண்டு வயது மகள் தன்விகா ஆகியோரின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சத்தியவதியும் சிறுவன் ருத்ரனும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

தற்போது இரண்டு வயது பெண் குழந்தை தன்விகா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கணவன் முரளி வேணுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் சிக்கனத்தில் தொடங்கி, திருமண நாள் கொண்டாட்டத்தில் முடிந்த இந்த மோதல், ஒரு பச்சை மண்ணின் உயிரைப் பறித்து அந்தக் குடும்பத்தையே சிதைத்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

6 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

6 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

6 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

6 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

6 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

7 மணத்தியாலங்கள் ago