“தினமும் சித்திரவதை தாங்க முடியல…” யூடியூப் நிருபரை கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொன்ற மனைவி… சந்தேகத்தால் வந்த வினை… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 29, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் அசோக் ரோட்டில், யூடியூப் சேனல் நிருபராகப் பணியாற்றி வந்த நபர் ஒருவரை, அவரது மனைவியே கல்லைத் தூக்கிப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சேரியாலைச் சேர்ந்த மோகன் (45) என்ற யூடியூப் நிருபருக்கும், அவரது மனைவி ஜமுனா (40) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு நடந்து வந்துள்ளது. இதில் கணவன் மீது ஏற்பட்ட தீவிர சந்தேகம் மற்றும் அவர் கொடுத்த தொடர் சித்திரவதைகள் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

   

ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற மனைவி ஜமுனா, பெரிய கல்லைத் தூக்கி மோகனின் தலையில் கொடூரமாகப் போட்டுத் தீர்த்துக்கட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மோகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஜமுனாவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.