காதலனுடன் ஓட்டம்…! “கணவனின் ரகசிய உறுப்பை கடித்த மனைவி… மூக்கை அறுத்து எறிந்த கணவன்…” உ.பி-ல் அரங்கேறிய விசித்திர கொடூரம்… ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் – சாதனா (27) தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சாதனா தனது கணவரின் நண்பருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், இரண்டு அரை மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 17 அன்று, சாதனா தனது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காகப் பக்கத்து வீட்டு மொட்டை மாடி வழியாகத் திருட்டுத்தனமாகத் தனது கணவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலின் போது, கணவன் தீபக் தன் மீது தாக்குதல் நடத்தி, தனது மூக்கைக் கடித்துத் துப்பி கால்வாயில் வீசிவிட்டதாகச் சாதனா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது அத்தை மாமனார் தன்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், சாதனா தான் முதலில் தகராறு செய்து, தீபக்கின் ரகசிய உறுப்பைக் கடித்ததாகவும், குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தடுத்தபோதே இந்தச் சம்பவம் நடந்ததாகவும் கணவர் தரப்பு போலிஸாரிடம் தெரிவித்துள்ளது. காயமடைந்த சாதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து, தீபக்கை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.