ஐயோ… கடலின் நடுவே நடந்த விபரீதம்… தந்தை-மகன் பயணித்த கப்பல்கள் மோதிக் கொள்ளும் அபாயம்… நடுக்கடலில் அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

மாலுமியான ருஷீல் சரண் வட திசையை நோக்கித் தன் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிரே ஒரு பெரிய கப்பல் வருவதைக் கண்டார். அது எந்தக் கப்பல் என்று அறிவதற்காக வழிகாட்டுதல் வரைபடங்களைச் சரிபார்த்தபோது, அவருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. எதிர்புறத்தில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த மாபெரும் கப்பல் அவருடைய தந்தையுடையது என்பது தெரியவந்தது.

பரந்த கடலின் நடுவே நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, ருஷீலின் தந்தை அவரிடம், “இவ்வளவு பெரிய கடலில், வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் தந்தை-மகன் இருவரும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டுள்ளனர். இதுதான் வளர்வது போலும்; நீங்கள் உங்கள் சொந்த பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணித்தாலும், வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுத்த நபருடன் பயணிப்பதை என்றுமே நிறுத்துவதில்லை” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.

   

https://www.instagram.com/reel/Dddov0zs-aJ/?utm_source=ig_web_button_share_sheet

   

“பில்லியன் கணக்கில் ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய வாய்ப்பு” என்று ருஷீல் இந்த அரிய தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியாகப் பகிர்ந்துள்ளார். இரு வேறு தலைமுறை மாலுமிகளான தந்தையும் மகனும் கடலின் நடுவே சந்தித்துக் கொண்ட இந்த நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.