“ஆசைப்பட்டு கேட்ட சேலையை வாங்கி தரல…” ஆத்திரத்தில் குக்கரால் அடித்து… கணவர் மீது ஏறி அமர்ந்து கொடூரமாக கொன்ற மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஹரேராம் சிங் என்ற 35 வயது நபர், தமது மனைவி சுனிதா தேவிக்கு ஆடை வாங்கித் தருவதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த சுனிதா தேவி, சமையலறை பாத்திர மூடியால் கணவரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். அதில் மயங்கி விழுந்த கணவரின் மீது ஏறி அமர்ந்து, அவரது தொண்டையை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, கணவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக உறவினர்களை நம்பவைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தீவிர விசாரணையின் அடிப்படையில் மனைவியைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணைக் காவல் துறை விசாரணைக்காகக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.