FLASH NEWS:டெல்லி போராட்டம்… மதுரையில் எதிரொலி… கல்லூரிக்குள் புகுந்த போலீஸ்… நள்ளிரவில் நடந்த கைது படலம்… கொந்தளிப்பில் தமிழகக் கல்லூரிகள்…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் களமிறங்கியுள்ள நிலையில், மதுரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த காவல்துறையினர், இந்திய மாணவர் சங்கத்தைச் (SFI) சேர்ந்த டேவிட் ராஜதுரை, டீலன் மற்றும் ரவிக்குமார் ஆகிய மாணவர்களைக் கைது செய்தனர்.

இதனிடையே, சென்னை திருவொற்றியூரிலும் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து காவல்துறையினர் மாணவர்களைக் கைது செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஜனநாயக வழியில் போராடும் மாணவர்களைக் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சென்று காவல்துறையினர் கைது செய்வது அப்பட்டமான அடக்குமுறை என்றும், கல்வி நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும் நடவடிக்கை என்றும் கூறி மாணவர் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.