தம்பி வயது நபருடன் உல்லாசம்… நேரில் பார்த்த கணவர்… ஸ்கெட்ச் போட்டு மனைவி செய்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஆவணி 19, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் கம்சகரா என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் சுப்பிரமணியா. இவருக்கு மீனாட்சி (53) என்ற மனைவி உள்ளார். தையல்காரரான சுப்பிரமணியாவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டனர். அவருடைய உடலை தீவைத்தும் எரித்தனர். இது தொடர்பாக போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது அந்த நபரின் மனைவி மீனாட்சிக்கும் அவருடைய உறவினரின் மகனான பிரதீப் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அதுக்குள்ள காதலாக மாறியுள்ளது.

சுப்பிரமணியா புதிதாக ஒரு வீடு கட்டிய நிலையில் அந்த வீட்டில் ஆசாரி வேலை செய்வதற்காக பிரதீப் சென்றுள்ளார். உறவினர் மகன் என்பதால் அந்த வாலிபருடன் மீனாட்சி நெருங்கி பழகினார். அதனை கணவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது ஒரு கட்டத்தில் கணவருக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் கள்ளத்தொடர்பை கைவிட மனம் இல்லாத மீனாட்சியும் பிரதீப்பும் சுப்பிரமணிய அவை கொலை செய்ய முடிவு செய்தனர்.

   

இதற்கு பிரதீப் தனது நண்பர்களான இருவரிடம் உதவி கேட்ட நிலையில் கொலைத்திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரதீப் அவரை கொலை செய்துவிட்டு தீ வைத்து எரித்ததும் அதற்கு மீனாட்சி உறுதுணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சகோதரர் வயது நபருடன் உடலுறவு வைத்துக் கொண்டு கணவரையே கொலை செய்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.