உடல் எடையை குறைக்க ரொம்ப சிரமப்படுறீங்களா?… தினமும் காலை இந்த நீரை ஒரு டம்ளர் குடிங்க போதும்…!

By Srimathi on ஆவணி 19, 2025

Spread the love

உடல் நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மசாலாக்களில் ஒன்று வெந்தயம். வெந்தய நீர் உடல் பருமனை குறைத்து, எடை குறைப்பதற்கு உதவுகிறது. இந்த நீர் வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால், ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கிறது. இது வளர்ச்சியை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை குறைக்கிறது.

வெந்தய நீர் தயாரிக்கும் முறை :

   
  • இரவில் உறங்குவதற்கு முன், தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும்.
  • வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை, காலையில் லேசாக சூடாக்கி,பின் அதை வடிகட்டி, லேசாக எலுமிச்சை சாற்றை பிழிந்து, தினமும் குடித்து வந்தால், உடலில் பல நன்மைகள் கிடைக்கும்.

வெந்தய நீரின் பயன்கள் :

   

செரிமானத்தை சீராக்கும்: வெந்தய நீர் சுத்தமான பாக்டீரியாவை ஊக்குவித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல், வாயு தொல்லை, அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

 

கொழுப்பை குறைக்கும் : வெந்தய நீர் குடிப்பதால்,நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கும். இதனால் இதயம் ஆரோக்கியம் பெறும்.

நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம்: ரத்த சர்க்கரை அளவை குறைத்து, டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் இது கூந்தல் மற்றும் தோல் ஆரோகியத்திற்கு உதவுகிறது.