மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், கணவனின் நிறத்தை ஏளனம் செய்து வந்த மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டிகேடா கிராமத்தைச் சேர்ந்த தேவகிருஷ்ணா என்பவரது மனைவி பிரியங்கா, தனது கணவர் கருப்பாக இருப்பதாகக் கூறி அடிக்கடி அவமானப்படுத்தி வந்துள்ளார். “நீ எனக்குத் தகுதியானவன் அல்ல, உன்னை விடச் சிறந்த ஒருவருக்கு நான் தகுதியானவள்” என்று கூறி வந்த பிரியங்கா, விவாகரத்தும் கோரி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், கடந்த 2020-ம் ஆண்டு முதல் கம்லேஷ் என்பவருடன் பிரியங்காவிற்குத் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இவர்களது காதலுக்குத் தடையாக இருந்த தேவகிருஷ்ணாவைத் தீர்த்துக்கட்ட இருவரும் சதித்திட்டம் தீட்டினர். இதற்காக கம்லேஷ் தனது நண்பன் சுரேந்திரா என்பவரை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, கூலிப்படையாகப் பயன்படுத்தியுள்ளார். நள்ளிரவில் தேவகிருஷ்ணா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த கொலையாளி கூர்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளான்.
கொலையை மறைப்பதற்காகப் பிரியங்காவும் அவரது காதலனும் இணைந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். வீடு சூறையாடப்பட்டது போலவும், அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றது போலவும் காட்டினர். இதற்காகத் தன்னைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகளைத் திருடிச் சென்றதாகப் பிரியங்கா கூச்சலிட்டு நாடகமாடினார். இருப்பினும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையிலேயே பிரியங்காவின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின.
தார் மாவட்ட எஸ்.பி. மயங்க் அவஸ்தி தலைமையிலான போலீசார், 36 மணி நேரத்திற்குள் இந்த மர்ம முடிச்சை அவிழ்த்தனர். கணவன்-மனைவி இடையே இருந்த நிறம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பிரியங்காவின் கள்ளக்காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. தற்போது பிரியங்கா மற்றும் அவரது காதலன் கம்லேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கூலிப்படை கொலையாளி சுரேந்திராவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…