#image_title
இந்து மத வழிபாட்டில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது கற்பூரம் ஏற்றுவது. எந்த பூஜையின் முடிவிலும் கற்பூரம் காட்டுவது வழக்கமான ஒன்று. இது தவிர கோவில்களில் சன்னதிக்கு முன்போ அல்லது கொடி மரத்திற்கு முன்போ கற்பூரம் ஏற்றி வழிபடுவதும் உண்டு. இந்த கற்பூரம் இறைவழிபாட்டில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது இதனால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.
கற்பூரம் கரைந்து எறிவதற்கு பின்னால் இருக்கும் கருத்து இந்த மனித உடல் கரைந்து ஜோதியாக ஆன்மாவாக இறைவனிடம் ஐக்கியமாக வேண்டும் இந்த பிறவியிலிருந்து இறைவன் முக்தி அளிக்க வேண்டும் என்பதன் பொருட்டே கற்பூரம் ஏற்றப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் கற்பூர வாசனை நமது ஆன்மாவிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எந்த இடத்தில் கற்பூரம் இருக்கிறதோ அந்த இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
இது மட்டுமல்லாமல் வீட்டிலும் கற்பூரம் ஏற்றுவது எதிர்மறை ஆற்றல்களை தடுத்து நேர்மறை ஆற்றல்களை பெருக்கும். இதனால் குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மாலை நேரத்தில் வீட்டில் வழிபாடு செய்யும்போது கற்பூர ஆரத்தி ஏற்றுவது தெய்வங்களை மகிழ்விப்பதாகவும் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கிறது என்பது ஐதீகம்.
இது மட்டுமல்லாமல் தொடர்ந்து கற்பூரம் வீட்டில் ஏற்றுவதால் குடும்பத்தின் செழிப்பு மற்றும் நிதி முன்னேற்றம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது. கற்பூரம் ஏற்றுவது மட்டுமல்லாமல் ஒரு சில இடத்தில் பச்சை கற்பூரம் வைத்தாலும் அது நன்மை பயக்கும். நீங்கள் பணத்தை வைத்து எடுக்கும் லாக்கர் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரத்தை போட்டு வைத்தால் அது பணவரவை அதிகரிக்கும்.
சமையலறையில் கற்பூரத் துண்டுகளை வைப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும். இதனால் நமக்கு உணவு மற்றும் தனம் தானியத்தை குறைவில்லாமல் வைத்துக் கொள்ளும். வாசலில் கற்பூரம் கொளுத்தும் போது அது கண் திருஷ்டி விலகி கெட்ட சக்திகளை வெளியேற்றும். எந்த ஒரு வழிபாடு செய்தாலும் கற்பூரம் காட்டாமல் நிறைவு செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…