#image_title
பிரபல நடிகரான விஜய் நடிப்பில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக தளபதி தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகி விஜய் முழு நேரமாக அரசியலில் ஈடுபட போகிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் ஏற்கனவே தொடங்கி விட்டார். தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாடு இந்த மாதம் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இன்று அதிகாலை பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. வணக்கம். உங்களை நானும் என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன் நினைக்காத நிமிடம் கூட இல்லை. ஏனெனில் நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில் இந்த கடிதம். அதுவும் முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும் இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். அரசியல் ரீதியாக சட்டபூர்வமாக உறுதியாக நிறைவேற்றி காட்ட வேண்டும் இதுதான் என் நெஞ்சில் நீண்ட காலமாக அணியாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கும் ஒரு லட்சிய கனல்.
இன்று நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டு திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால் நம் அரசியல் களப்பணிகளுக்கான விழா என்பதும் இதில் உள்ள அர்த்தமாகவே உறைந்து கிடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகனட மாநாடு. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் எனில் இது நம்முடைய கொள்கை திருவிழா. அதுவும் வெற்றி கொள்கை திருவிழா. இப்படி சொல்லும் போதே ஓர் எழுச்சி உணர்வு நம் நெஞ்சில் தொற்றிக் கொள்கிறது. இது தன் தாய் மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பான நிகழ்வு தான்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி மாநாட்டில் பங்கேற்பது வரை நமது கழகத்தினர் ராணுவ கட்டுப்பாடுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும். நமது கழகம் மற்ற அரசியல் கட்சிகள் போல சாதாரணமான இயக்கம் இல்லை. இது ஆற்றல்மிக்க பெரும்படை. இளஞ்சிங்கப்படை. சிங்க பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்து கூட்டு பெரும்படை. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் போது தான் அவர்களுக்கு புரியும் தமிழக வெற்றி கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றிக்கான போகின்ற கட்சி என்பதை நம்மை எடை போடுபவருக்கு இனிமேல் புரிந்து கொள்வர். மாநாட்டுக்கான நாட்களை மனம் என்ன தொடங்கிவிட்டது. உங்களை அருகில் சந்திக்கப் போகும் சந்தோஷ தருணங்களை இப்போது மனம் அளவிட தொடங்கிவிட்டது என அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…