“என் அம்மா வியாபாரம் போச்சு”…. நடிகர் பிரதீப்பை கொன்றது ஏன்?….. கைதான நவீன் அளித்த ‘திடுக்கிடும்’ வாக்குமூலம்….!

By Nanthini on புரட்டாதி 11, 2026

Spread the love

சென்னையில் துணை நடிகர் பிரதீப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வழக்கில் கைதான நவீன் உட்பட 4 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவீனின் தாயார் டிபன் கடை நடத்தி வரும் இடத்திற்கு அருகே, பிரதீப் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா நாளில் சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறு மற்றும் தீவிரமடைந்த முன்விரோதம் காரணமாகவே பிரதீப் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கைதான நவீன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.