தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான நகைச்சுவைப் பாத்திரங்களை இவர் ஏற்று நடித்துள்ளார். தனது நகைச்சுவைகளில் சமூக சிந்தனைகளையும் கலந்து பேசக்கூடியவர். அதனால் சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
பல சிந்தனையான நகைச்சுவையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் வைத்திருப்பவர். சினிமா தாண்டியும் பல நற்காரியங்களை செய்தவர் விவேக். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் தீவிர ரசிகனான விவேக் அவரின் கொ ள்கைகளை பின்பற்றுவதோடு அதன் வழியில் நடந்தும் உள்ளார்.
கிரீன் கலாம் எனும் பெயரில் பல லட்சம் மரங்களை நட்டத்தோடு அதை பராமரித்தும் வந்துள்ளார். மேலும் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையில் பல சமுதாய சீர்திருத்த பணிகளை செய்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதய முடக்கம் காரணமாக காலமானார். அவரின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

விவேக் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் அவருடைய போட்டியாளர் என சொல்லப்பட்ட வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இருவரும் காமெடியில் போட்டி போட்டு பட்டையைக் கிளப்புவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் தனித்தனியே மார்க்கெட் உருவானதால் பிரிந்து சென்றார்கள். கடைசி வரை சேர்ந்து நடிக்கவே இல்லை.
இந்நிலையில் இருவரும் ஏன் ஒரு கட்டத்துக்குப் பிறகு இணைந்து நடிக்கவில்லை என்பது குறித்து விவேக்கின் மனைவி அருள்செல்வி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “என் கணவர் விவேக்கும், வடிவேலுவும் சேர்ந்து நடித்தது அதிகமாக வி சேகர் படங்களில்தான். அதில் இருவருக்கும் தனித்தனியாக குடும்பம் இருக்கும். இருவரும் படத்தைக் கலகலப்பாக கொண்டு செல்வார்கள். ஆனால் அதன் பிறகு கதைகள் வராததால் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.
