சிவபெருமானுக்கு வில்வம் ஏன் வைத்து வழிபடுகிறார்கள்…? சிவனுக்கும் வில்வத்திற்கும் உள்ள தொடர்பு என்ன…?

Spread the love

இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பொருள்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது. பூஜையின் போது அந்தந்த கடவுளின் பொருள்களை வைத்து நாம் வழிபடும்போது அது கூடுதல் பலனை தருவதாக சாஸ்திரம் கூறுகிறது. அதுபோல் சிவபெருமானுக்கு பல பொருட்கள் உகந்ததாக இருந்தாலும் மிக சிறப்பானதாக கூறப்படுவது வில்வம். எந்த ஒரு பழமையான சிவாலயங்களிலும் கண்டிப்பாக வில்வமரம் இருக்கும். இந்த வில்வம் ஏன் சிவபெருமானுக்கு உகந்ததாக கூறப்படுகிறது அதன் காரணம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

வில்வம் என்பது அகத்தில் நிறைந்தது என்பது பொருள். பல மரங்கள் இந்த பூமியில் இருந்தாலும் வில்வமரம் ஏன் சிவனுக்கு உகந்ததாக கூறப்படுகிறது என்றால் வில்வமரம் நெருப்பின் அம்சமாகும். இதில் உள்ள ரசாயனம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. சிவ பூஜையில் சிவ மந்திரம் சொல்லும் போது உடல் சூடாகும் இப்படி நடக்கும் போது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும் என்று கூறப்படுகிறது.

இதே சித்தர்கள் வழியில் பார்க்கும்போது அசுரர்கள் சிவ வழிபாடு செய்யபோது அவர்கள் சைவர்களாக மாறி சிவகதி அடைந்து சதுரகிரி மலைத்தளத்தில் வில்வமாக மாறி பெருமாளுக்கு சேவை செய்வதா சொல்கிறார்கள். வில்வ இலையை சாதாரணமாக நாம் பறிக்க முடியாது. அதை பறிப்பதற்கே சில விதிமுறைகள் இருக்கிறது.

அமாவாசை பௌர்ணமி மாதப்பிறப்பு திங்கட்கிழமை அஷ்டமி நவமி சதுர்த்தி நாட்களில் வில்வ இலையை பறிக்கக் கூடாது. அதற்கு முந்தைய நாளிலே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வில்வத்தை பறித்த பிறகு அதை ஆறு மாதம் வரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம் உலர்ந்த வில்வமும் புனிதமானது. வில்வ மரத்திற்கு வெள்ளிக்கிழமை பால் ஊற்றி வணங்குவதால் செல்வ வளம் பெருகும் என்று கூறுகிறார்கள். இது மட்டுமில்லாமல் வில்வம் இலை காய் போன்றவை பல மருத்துவ குணங்கள் கொண்டிருக்கிறது.

வில்வத்தில் மூன்று இலைகள் இருக்கும் அதில் ஒரு இலை விஷ்ணுவாகவும், ஒரு இலை பிரம்மாவாகவும் ஒரு இலை சிவாபெருமானாகவும் பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சிவபெருமானின் மூன்று கண்களை இந்த வில்வம் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் வீட்டில் வில்வ மரத்தை வளர்த்தால் அது அஸ்வமேத யாகம் செய்தா பலன் கொடுக்கும் என்று கூறுகிறார்கள். மற்ற பொருட்களை பூஜைக்கு பயன்படுத்திய பின் மறுபடியும் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த வில்வத்தை பூஜைக்கு பின்னரும் மறுபடியும் அதை வீட்டில் வைத்து பயன்படுத்தலாம். அவ்வளவு புனிதம் வாய்ந்தது இந்த வில்வம்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

8 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

8 மணத்தியாலங்கள் ago