raanav

என் மகன்கிட்ட மட்டும் விஜய் சேதுபதி ஏன் அப்படி நடந்துகிறார்… என் மனைவி டிவி பார்த்து அழுகுறாங்க… வருத்தத்துடன் பேசிய BB ராணவின் தந்தை…

By admin on மார்கழி 19, 2024

Spread the love

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களை விடவும் சீசன் மிகவும் ஸ்பெஷல் ஏனென்றால் கடந்த ஏழு சீசங்களையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எப்படி கொண்டு போவார் என்று நினைத்த நேரத்தில் அருமையாக கொண்டு போய்க் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

   

தற்போது 70 நாட்களைக் கடந்து பிக் பாஸ் போய்க்கொண்டிருக்கிறது. முதலில் 18 போட்டியாளர்கள் உள்ளே சென்றனர். Wildcard Constestant ஆக ஐந்து பேர் உள்ளே வந்தனர். இந்த முறை பிக் பாஸில் ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்கள் தான் கலந்து கொண்டது போல் இருக்கிறது. ஆனாலும் தற்போது சில வாரங்களாக போட்டி சுவாரசியமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. உள்ளே வந்து ஐந்து Wildcard போட்டியாளர்களில் 3 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். இரண்டு பேர் எவிக்ட் ஆகி வெளியே சென்றுவிட்டனர்.

   

உள்ளே இருக்கும் மூன்று Wildcard கண்டஸ்டன்ஸில் ஒருவர்தான் ராணவ். பார்ப்பதற்கு உயரமாக வாட்டம் சாட்டமாக இவர் உள்ளே வந்தவுடன் இவர் பயங்கரமாக இந்த கேமை ஆடப்போகிறார் வேற லெவலுக்கு கொண்டு செல்ல போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில் அவர் புஸ்வானம் போல் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விளையாட்டின் மீது எந்த ஆர்வமும் இருப்பது போல் இல்லாமல் விளையாட்டுத்தனமாக இருந்தது போல் இருந்தது.

 

அதனால் இவரை ஒரு காமெடியாக தான் வீட்டில் உள்ளவர்கள் டீல் செய்வார்கள். இது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி கடந்த வாரம் நடந்த எபிசோடில் ராணுவை மிகவும் நக்கல் அடித்துவிட்டார். அவர் சரியாக பதில் சொல்லாததால் நோஸ்கட் செய்வது போல் உட்காருங்க என்று பல இடத்தில கூறியிருப்பார். இதைப் பார்த்த ராணவின் தந்தை வருத்தத்துடன் பேட்டி அளித்திருக்கிறார்.

ராணவின் தந்தை கூறியது என்னவென்றால் என் மகன் மட்டும் வீட்ல ரொம்ப கஷ்டப்படுறான் எல்லாரும் அவனை ரொம்ப பேசுறாங்க அவமானப் படுத்துறாங்க அது மட்டும் இல்லாம விஜய் சேதுபதி கூட என் பையன் கிட்ட மட்டும் ஏன் அப்படி நடந்துக்கிறார்ன்னு தெரியல. மகனை டிவில பார்க்கலாம்னு என் மனைவியை டிவி நடக்கிறதை பார்த்து பார்த்து உட்கார்ந்து அழுதுட்டு இருக்காங்க என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார் ராணவின் தந்தை.