kapil

அட்லீயை நான் உருவகேலி செய்தேனா…? பூதாகரமாக வெடித்த சர்ச்சைக்கு பதில் அளித்த பிரபலம்…

By admin on மார்கழி 19, 2024

Spread the love

அட்லீ தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். தற்போது பான் இந்தியா அளவில் பிரபலமாக இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. பின்னர் 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

   

அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜயை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து விஜயுடன் இணைந்து மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் வெற்றி பெற்றது. அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை எடுத்து கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் தாண்டி சாதனை படைத்தது. அதனால் பாலிவுட்டிலும் அட்லியின் மார்க்கெட் எகிறி விட்டது என்று சொல்லலாம். தற்போது அடுத்ததாக சல்மான் கானை வைத்து படம் எடுக்க போவதாக அதற்காக அட்லீ தயாராகி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

   

இந்நிலையில் அட்லீ இயக்கிய தெறி திரைப்படம் வெற்றி பெற்றதால் பேபி ஜான் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் அட்லீ. அதில் கபில் ஷர்மா தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் அட்லீ கலந்து கொள்ளும்போது சினிமாவை பற்றி அவரிடம் கேட்கும் போது லைட்டா உருவகேலி செய்வதுபோல் கபில் ஷர்மா கேட்டிருக்கிறார். அதற்கு அட்லீயும் நெத்தியடி பதிலாக இங்கு உருவம் முக்கியம் இல்ல நல்ல திறமையும் மனதும் இருந்தால் போதும் என்று பதில் அளித்து இருக்கிறார். ஆனாலும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

 

தற்போது அந்த சர்ச்சைக்கு இன்று பிரபல தொகுப்பாளரான கபில் ஷர்மா தனது பதிவு மூலம் பதில் அளித்திருக்கிறார். நான் அட்லீயை உருவகேலி செய்தேனா? அந்த நிகழ்ச்சியில் நான் அப்படி எதுவும் குறிப்பிடவில்லையே நன்றாக பார்த்துவிட்டு அதற்கு பிறகு பேசுங்கள் என்று ன்னிடத்தில் தவறு இல்லை என்பது போல கூறியிருக்கிறார் கபில் ஷர்மா.