இந்தியாவில் பல மொழிகள், பல கலாச்சாரங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட இப்பொழுது ஒரே கலாச்சாரமாக மாறி முன்னேறி வருகிறது, அதற்கு முக்கியமான காரணம் சினிமா தான், வெவ்வேறு விதமான மக்களின் பார்வையை ஒன்று கூடி பார்ப்பதற்கான ஒரு கருவி சினிமாவாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரங்கள் இருக்கிறது, அதற்கேற்றவாறு சினிமா இயக்கி திரையில் கொண்டு வந்து வெற்றியை கண்டு கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்னால் ஒவ்வொரு படமும் அந்த மொழி பேசும் மக்களிடம் மட்டுமே போய் சேரும், ஆனால் தற்போது வெவ்வேறு மொழிகளில் பேசும் மக்களிடமும் வேறு மொழி படம் சேருகிறது. தற்போது கலாச்சாரமும் தொழில்நுட்பமும் வளர்ந்து இருப்பதால் வேற மொழி படங்களும் சரி, வேற நாட்டில் வெளிவந்த படங்களும் சரி தற்போது மக்களிடையே எளிதில் வந்தடைகிறதால், மக்களின் சினிமா பார்க்கும் பார்வையின் விதமே மாறிவிட்டது, தற்போது ஒட்டு மொத்த இந்தியாவில் வித்தியாசமான கதைகளையும், மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டும் முறையில் இயக்கம் அதிகமாக மலையாளத்தில் உருவாகி வெளிவரும் படங்கள் ஒட்டுமொத்த இந்தியா சினிமா துறையினர் கவனத்தையும் பெற்று வருகிறது.

மற்ற மாநிலத்தில் உள்ள பெரிய சூப்பர் ஸ்டார் களும் பண்ண முடியாத பல விஷயங்களை மலையாளத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ஆன மோகன்லால், மம்முட்டி அவர்கள் கமர்சியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதையின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து அப்படத்தின் கதைக்கேற்றவாறு நடித்து மக்களிடையே ஒரு நல்ல படங்களை உருவாக்கி மக்களிடம் கொடுக்கிறார்கள். அதனால் நல்ல சினிமா என்றாலே அது மலையாள படம் என்று, மக்களுக்கு இடையே மலையாளத்தில் வரும் படங்கள் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
அதனால் தற்போது தமிழ் சினிமா துறையில் இருக்கும் பல பிரபல நடிகர்கள் ஏன் மலையாளத்தில் வரும் நல்ல கருத்துள்ள படங்கள் போல் இங்கே வருவதில்லை, எதற்காக பொழுதுபோக்கான படங்களை மட்டும் இயக்குகிறார்கள். எப்பொழுதும் கமர்சியல் படங்கள் மட்டுமே நடிக்கிறார்கள் என்று தமிழ் நடிகர் மேல் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. தமிழ் சினிமா துறையில் இருக்கும் பிக்கஸ்ட் ஸ்டார்கள், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் இது போன்ற பல முன்னணி நடிகர்கள் ஏன் மம்முட்டி, மோகன்லால் போல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
