எம் ஜி ஆர்-க்கு முன்பே திமுக-வில் இணைந்த நடிகர் சிவாஜி கணேசன்… விலகியது ஏன் தெரியுமா..?

By vinoth on மாசி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவையும் தமிழக அரசியலையும் தனித்தனியாக எப்போதும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு இன்றுவரை இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலந்துள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை ஐந்து அண்ணாதுரை, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் வி என் ஜானகி என இதுவரை ஐந்து முதல்வர்கள் கிடைத்துள்ளனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் திமுக என இரு கட்சிகளும் நடிகர், நடிகைகளை தங்கள் கட்சிக்கு பிரச்சாரகர்களாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் அதில் காங்கிரஸை விட திமுகவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. திமுகவில் எம் ஜி ஆர், எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் செயல்பட, காங்கிரஸில் கே பி சுந்தராம்பாள் மற்றும் சிவாஜி கணேசன் போன்றவர்கள் செயல்பட்டனர்.

   

இதில் சிவாஜி கணேசன் முதலில் திராவிட முன்னேற்ற கழகத்தில்தான் உறுப்பினராக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு சென்றவர். திமுகவில் தீவிரமாக செயல்பட்ட சிவாஜி கணேசனுக்கு கடவுள் பக்தி அதிகம். அதனால் அவர் திருப்பதி உள்ளிட்ட கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவார். இது கட்சியில் உள்ள மற்றவர்களின் ஆட்சேபத்துக்கு ஆளாகியுள்ளது.

   

கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் சிவாஜி கணேசனின் இந்த செயலுக்கு நேரடியாகவே விமர்சனத்தை வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் திமுகவில் தனக்கு பின்னர் சேர்ந்த எம் ஜி ஆருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நினைத்து அங்கிருந்து விலகி, காமராஜ் தலைமையிலான காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

ஆனால் அவர் சென்று சேர்ந்த காலம் மெல்ல மெல்ல காங்கிரஸின் புகழ் தமிழகத்தில் மங்க தொடங்கியிருந்த காலம். 1967 ஆம் ஆண்டு திமுகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அதன் பின்னர் ஆட்சியை பிடிக்கவே முடியாத சூழல் உருவானது.

காங்கிரஸில் நீண்ட காலம் இருந்த அவர் பின்னர் 1988 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் மறைவுக்குப் பின்னர் தனியாக தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி ஆரம்பித்து தேர்தலில் படுதோல்வி அடைந்து பின்னர் அரசியலை விட்டே விலகினார்.